உழைப்பு;பணம்
காலையில் நடைபற்சிக்காக சாலையில் (படத்தில் காணும்,) ஒரு மாற்று திறனாளி ஏதையோ தேட நானும் எனது நண்பரும் அருகில் ஒடினோம் அங்கு அவர் ஏதோ விஷச வீட்டில் வைத்து உடைத்த பூசணிக்காயில் இருந்த 5௹பாய் நாணயங்கள் ஐந்தை எடுத்தார் உடனே எனது நண்பர் 25௹பாய்க்கு இந்த மாதிரி முன்று சைக்கிளில் இருந்து வெளியில் நடுரோட்டில் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல் தவழ்கிறான் இவனுக்கு ௹பாய் 1000கொடுத்தால் தனது ஜனநாயக உரிமையான தனது வாக்கை மாற்றிப்போட மாட்டான? என சொன்னார். அதற்கு நான் சொன்னேன் அன்றாடம் பசியில் வாடும் மனிதன் தனது ஜனநாயக தேர்வு சரியாக செய்யமாட்டான் என்று கூறிஉதாசினம் செய்கிறீர்கள். ஆனால் அரசியல்வாதிகள், படித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் பதவியில் சுகத்தை பெருக்கும் முயற்சியில் மற்றும் தங்கள் பணிகளை தொடர்ந்து தவிர்த்துவிட்டு ஆனந்தமாக சம்பள கூடுதல் மற்றும் ஒழங்கு நடவடிக்கைகள் தவிர்த்தல் காரணத்திற்கு தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி பொது நலனை விலை பேசுகிறார் அதனை யாரும் பேசுவது இல்லை. பத்திரிக்கைகள் 7வது ஊதியக்கு குழு பரிந்துரை மற்றும் சேமிப்பு நல நிதியிக்கு வருமான வரி ஆகிய இரண்டுக்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றேன்.
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல நபர்கள் தான் வாழ்க்கையில் மிகவும் கீழ்நிலையில் இருந்தாகவும் தான் இந்தநிலைக்கு வந்ததுக்கு காரணம் தனது உழைப்பு என அவர்கள் தன் வாயால் அவர்களை சொல்லுவார்கள். அல்லது மற்றவர்கள் சொல்வார்கள். இப்படி சொல்லபடும் இந்த கடினஉழைப்பு என்ற காரணத்தை சமுதாயம் இவர்களின் வசதிக்கு காரணம் என காலப்போக்கில் கருதும், இதில் உண்மை என்னவென்றால் கடினமான உழைப்பாளி என்கிற பட்டம் வரைமுறையில்லாமல் எல்லாவழியிலும் பொருள்தேடி மற்றும் அரசு பதவியில் வசதியாக உள்ள நபருக்கு கொடுக்கப்படுகிறது. அதுவும் இவரை விட கஷ்டபட்டு தொடர்ந்து ஆரவாரம் இல்லாமல் ஒரே நிலையில் உள்ளவருக்கு இந்த கடினஊழப்பாளி என்ற அங்கிகாரம் கிடைக்காது. அப்படி முயற்சி செய்தவர் தாழ்ந்தநிலைக்கு வரும்போது அவரது தீயசெயல்கள் காரணமாக பேசப்படும் அதுபோலத்தான் இந்த ஊனமுற்றவரின் முயற்சியில் சில்லறை காசுக்கள் பொருக்கப்பட்டதால் நமக்கு இது இழிவாக தெரிகிறது இதனை volume makes difference என Behavioural economics கூறுவார்கள்
செவ்வாய், 8 மார்ச், 2016
ஜனநாயகம் பணநாயகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
