செவ்வாய், 8 மார்ச், 2016

ஜனநாயகம் பணநாயகம்

உழைப்பு;பணம்
காலையில் நடைபற்சிக்காக சாலையில் (படத்தில் காணும்,) ஒரு மாற்று திறனாளி ஏதையோ தேட நானும் எனது நண்பரும் அருகில் ஒடினோம் அங்கு அவர் ஏதோ விஷச வீட்டில் வைத்து உடைத்த பூசணிக்காயில் இருந்த 5௹பாய் நாணயங்கள் ஐந்தை எடுத்தார் உடனே எனது நண்பர் 25௹பாய்க்கு இந்த மாதிரி முன்று சைக்கிளில் இருந்து வெளியில் நடுரோட்டில் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல் தவழ்கிறான் இவனுக்கு ௹பாய் 1000கொடுத்தால் தனது ஜனநாயக உரிமையான தனது வாக்கை மாற்றிப்போட மாட்டான?  என சொன்னார். அதற்கு நான் சொன்னேன் அன்றாடம் பசியில் வாடும் மனிதன் தனது ஜனநாயக தேர்வு சரியாக செய்யமாட்டான் என்று கூறிஉதாசினம் செய்கிறீர்கள். ஆனால் அரசியல்வாதிகள், படித்த அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் தங்கள் பதவியில் சுகத்தை பெருக்கும் முயற்சியில் மற்றும் தங்கள் பணிகளை தொடர்ந்து தவிர்த்துவிட்டு ஆனந்தமாக சம்பள கூடுதல் மற்றும் ஒழங்கு நடவடிக்கைகள் தவிர்த்தல் காரணத்திற்கு தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி பொது நலனை விலை பேசுகிறார் அதனை யாரும் பேசுவது இல்லை.  பத்திரிக்கைகள் 7வது ஊதியக்கு குழு பரிந்துரை மற்றும் சேமிப்பு நல நிதியிக்கு வருமான வரி ஆகிய இரண்டுக்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்  என்றேன்.
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல நபர்கள் தான் வாழ்க்கையில் மிகவும் கீழ்நிலையில் இருந்தாகவும் தான் இந்தநிலைக்கு வந்ததுக்கு காரணம் தனது உழைப்பு என அவர்கள் தன் வாயால் அவர்களை சொல்லுவார்கள்.  அல்லது மற்றவர்கள் சொல்வார்கள்.  இப்படி சொல்லபடும் இந்த கடினஉழைப்பு என்ற காரணத்தை சமுதாயம் இவர்களின் வசதிக்கு காரணம் என காலப்போக்கில் கருதும், இதில் உண்மை என்னவென்றால் கடினமான உழைப்பாளி என்கிற பட்டம் வரைமுறையில்லாமல் எல்லாவழியிலும் பொருள்தேடி மற்றும் அரசு பதவியில் வசதியாக உள்ள நபருக்கு கொடுக்கப்படுகிறது.  அதுவும் இவரை விட கஷ்டபட்டு தொடர்ந்து ஆரவாரம் இல்லாமல் ஒரே நிலையில் உள்ளவருக்கு இந்த கடினஊழப்பாளி என்ற அங்கிகாரம் கிடைக்காது. அப்படி முயற்சி செய்தவர் தாழ்ந்தநிலைக்கு வரும்போது அவரது தீயசெயல்கள் காரணமாக பேசப்படும் அதுபோலத்தான் இந்த ஊனமுற்றவரின் முயற்சியில் சில்லறை காசுக்கள் பொருக்கப்பட்டதால் நமக்கு இது இழிவாக தெரிகிறது இதனை volume makes difference என Behavioural economics  கூறுவார்கள்

வியாழன், 29 மே, 2014

வழக்கறிஞர் தொழிலும்-பொதுசேவையும்

நான் சட்டப்படிப்பு முடித்து வக்கீல் என பதிவு செய்யம் போது என்னிடம் ஒரு நண்பர் ,காந்தி நல்ல தொழில் அல்ல என்று தூக்கி ஏறிந்த தொழில் அதையா செய்ய போகிறாய்?என்று தார்மீகரீதியாக கேள்வி எழுப்பினார். அது என்னை சற்று திக்குமுக்காட செய்தது. மேலும் எனக்கு வேறுஎந்த வாய்ப்புமில்லாத காரணத்தால் நான் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தேன். அதன்பிறகு பிற்காலத்தில் நம்மால் பிறருக்கு நல்ல பலன் என்ன செய்யமுடிந்தது
  என்று பல நாள்கள் நான் நடைமுைறயில் பார்க்கமுடிந்தது. ஆனால் எனது ஆர்வம் இத்துடன் நிற்காமல் ஒருபடி மேலே போய் ஏன் நீதிபதி ஆனால் மேலும் நன்கு பணிபுரிய முடியும் என்று நினைத்தேன். அதுவும் தவறு. எழுத்தை மட்டும் வைத்து தீர்ப்பு கொடுத்தால் அது இந்த கல்வி அறிவு குைறந்த கிராமங்களில் மிகவும் தீங்கு விைளவிக்க கூடியது என்று பலசந்தர்பங்களில் உணர்ந்தேன்(ஒரு மனிதன் தனக்கு கைெயழுத்து மட்டும் போட தெரியும் ஆனால் படிக்க ,எழுத தெரியாது என்று என்னிடம் நிருபித்தன் வாயிலாக என்னை அவனுக்காக வாதிடவைத்து அவனது தப்பான ஆவணத்தை ரத்து செய்ய வைத்தான்) 
பிறகு ஒரு சமயத்தில் ஒரு நண்பர் வழக்கில் அவரது நண்பி ( அந்த பெண்ணிற்கு இரு காதலர் இருந்தார்கள், இவர் ஒரு திருமணமான பெண்) எவ்வாறு தனது மருத்துவ செலவிற்கு தனது நகையை அடகு வைக்க கொடுத்தை தெரிந்தார், பிறகு அந்த எனது நண்பி மீது நான் செய்த குறைவான ன மதிப்பீடு குறித்து மனம்வருந்தி வாடினேன். பிறகு அவ்வாறு இரு காதலர்களில் ஒருவர் ஏமாளியாகதான் இருப்பார் அவருக்கு அந்த பெண் செய்து துேராகம் என்று எனது சிந்தை ஒரு போரட்டாத்திலிந்து. அப்போழூது எனது அசான் வாழுங் கலை நிறுவுனர் ரவி சங்கர் காட்டிய வழியில் (accept the people as they are) எனது சிந்தனைகளை செலுத்த ஆரம்பித்த பிறகு அந்த போரட்டம் முடிவுக்கு வந்துது.
 பிறகு வேறு தருணத்தில் ஒரு நல்ல காதலன் தனது காதலி காதலுக்காக மதம் மாறியது தவறு என்று அவர்களின் குழந்தை பிறந்த செய்தி கேட்டு  கேரளாவிலிருந்து மனைவியின் பெற்றோர்  ஒடிவந்ததைகண்டு மனம் உருகி அவரது காதலியை இஸ்லாத்திற்கு திரும்ப செல்ல பணித்தார். பிறகு அவர் ஒரு ஜமாத்தில் தனது மனைவி வீட்டார் முன்னிலையில் இஸ்லாமுக்கு மாறினார் ஆனால் அவர் சுனத் செய்து கொள்ளவில்லை, பிறகு அவர்கள் அந்திமகாலத்தில் அவர்களிைடயே அது ஒரு பெரிய கருத்து வேறுபாடகி ஏற்ப்பட்ட விவாகரத்து வழக்கில் அவர் அந்த காதலி விஷயங்களை கூற அதனை அந்த மூதியவர் ஒப்புக்கொண்டார். பிறகு அந்த பெண் தனது கணவர் இறந்தால் அவர் மூ ழூமையாக மதமாறதவர் என்று அவரது பிரேதம் காட்டிக்கொடுத்துவிடும் என்று அழுது கதறினார். அதனையும் உண்மை என ஒப்புக்கண்ட கணவர் என்னிடம் தான் ஒரு ஹிந்து என்பதால் எந்த ஒரு பலனும் இல்லை ஆனால் தான் எடுத்த பிறப்பை மாற்ற மனமில்லை என்றார். அப்பொழுது அவரது மகனுக்கு வயது 21. நான் ஒரு துண்டு தோல்  உங்களை இந்த மகனிடமிருந்த பிரிக்கிறது என்று கூறி மன(த) மாற்றம் ஏற்படுத்தினேன்,  பிறகு அவர்கள் மகனிடம் பேசிய போது அவர்களது விட்டில் விஷம் வாங்கி வைத்இருப்பதாகவும் தாயும் மகனும் விவாகரத்து கொடுத்து தகப்பனாைர அனுப்பிவிட்டு சாவயிருந்த அறிந்த மனம் நொகிழ்தேன். அந்த கேரள நாட்டு கண்ணகி எந்த வக்கிலும் எனது வீட்டிற்கு வரவேண்டாம் தான் தனது கணவர் கேட்கும் விவாகரத்தை அதற்கு கொடுத்துவிடுகிறேன் என்று கூறியவர் பின்பு தனது கணவருடன் ஐந்து நட்சத்திர விடுதியில் எனக்கு தனது குடும்பத்துடன் விருந்து கொடுக்கும் போது கூறினார் "எனது தங்கை கணவர் ஒரு வக்கில் அவர் உங்களை போல் இல்லாமால் சிற்றிண்பத்தில் (குடிப்பதில்) மு ழ்கிவிட்டார்." அந்த வழக்கில் என் கட்சிக்காரர் சிறுமதி கன்டு நான் ஏண்டா இந்தா அளூக்கு வக்கிலா போனோம் என்ற அளவுக்கு அந்த மனிதர் நடத்ைதயிருந்து ஆனால் பின்பு அவரது பால்ய நண்பர் என்னிடம் சொன்னார் அந்த இஸ்லாமிய பெண்  ஒரு இளம் விதைவை என்று எஎன்னிடம் அவரது கணவர் மறைத்தார் அதிலிருந்து அவரது காதலி பேரில் அவர் கொண்ட காதல் எவ்வளவு உயர்வானது  என்று தெரிந்து கொண்டேன். 
எனது நண்பர் ஒருவருக்கு 60 வயது கடந்த நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு ஒரு ப்ரோநோட் எழுதவேண்டும் என கூறினார்கள்,  பிறகு நீண்ட உரையாடல்க்கு பிறகு இந்த வயோதிகர் தன் மகனும் அவரது மனைவியும் இவரை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் எனவும் தான் கடன் வாங்கினால் அது பொருட்டு சமரசம் ஆகும் எனவும் கூறி கடைசியில் நான் ஏதோ கடன் கொடுத்தவர் என்றும் கடனை திரும்ப செலுத்தும் மாறு ஒரு கடிதம் எழுதப்பட்டது அந்த போஸ்ட் கார்ட் வைத்து ஊரில் அவர் ஒரு பஞ்சாயத்து வைத்தார், கடைசியாக பஞ்சாயத்து என்னிடம் வந்தது அந்த மகன் என்னிடம் வந்து தகப்பனார் எவ்வளவு கடன் வாங்கினாலும் தான் பொறுப்பு ஏற்பதாகவும் ஆனால் அவரை வீட்டுக்குள் ஏற்க முடியாது எனவும் கூறினார், இதற்கு இவர் அவரது தாயாரை இந்த வரவையுங்கள் என்று என்னிடம் மறைமுகமாக சொன்னார் நானும் அந்த மூதாட்டி வரவேண்டும் என்றேன்,  நான் கேட்டது போல் அந்த அம்மா வந்தார்கள் அவர் என்னை பார்க்கும் போது கணவர் இருக்க கூடாது இவர் முகத்தை நான் பார்க்க விரும்புவில்லை என்றார், அந்த அம்மா தன் கணவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் நகல் ஒன்றினை கொடுத்தார் அதில் அவர் விபச்சாரம் செய்வதாக சொல்லப்பட்டுந்தது பின்பு அந்த வயோதிகரை வரவழைத்து கேட்டதற்கு கதறினார் வயதில் சிறியவர்கள் ஆன உங்கள்களிடம்  ஒன்று மட்டுமே சொல்வேன் என கூறி அவரது மனைவி அவரை விட 8 வருடம் மூத்தவர் என ரகசியமாக கூறினார் நான் கேபமாய் பேசி அவரை அனுப்பி வைத்தேன் பிறகு 4 நாள் கழித்து எனக்கு அவர் எழுதிய தாபால் ஒன்று வந்தது அதில் அவர் மனைவியும் வேறுவருவரர் போட்டோ இருந்தது அதில் அவர் தன் மகன் இவருக்கு தான் பிறந்தார் எனவும் தான் திருமணம் செய்யும்போதே மனைவி கர்ப்பிணி என்றும் இந்த தபால் உங்கள் கைக்கு கிடைக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனவும் எழூதியிருந்தார், பின்பு 10 நாள் கழித்து அந்த மகன் மொட்டை தலையுடன் என்னிடம் கடன் வட்டியை அடைக்க பணத்துடன் வந்து நின்றான். 
 நான் ஒரு வணிகவியல் பட்டதாரி நான் பட்டயகணக்களாராக வரவேண்டும் எனது 18 வயதில் நினைத்தேன் நான் சொல்லப்போகும் சம்பவம் அந்த வருத்திற்கு மருந்தானதுஎனது தாயார் 1970களில் வியாபாரம  செய்து வந்தார் அதனால் அவர் வருமானவரி  செலுத்தவேண்டியிருந்தது அவர் 1980களில் வருமானவரி வழக்கை சந்திதார் அதற்கு charted accountant  ஒருத்தரிடம் இவ்வழக்கை நடத்தும்படிஒப்படைத்திருந்தார் அவர்  மிகவும் வயதானவர், சமூகத்தில் பாரம்பரிய மேல்வர்க்கம் ஸ்ரீரங்கம் கோயில் அருகில் வீடு , அவரிடம் அப்பா வரிகேட்பு தொகையை மூழுவதும் கொடுத்து மேல்முறையீடூ செய்ய கொடுத்தார் பிறகு வருடாவருடம் தசர விடுமுறை காலங்களில் எனது தாயார் வரிபாக்கியாக 3000 முதல் 5000  வரிபாக்கி உள்ளதாக வரும் பிறகு அதனை ரூபாய் 5000 துடன் எனது அப்பா ஆடிட்டரிடம் கொடுப்பார், அதைப்போல் நான் வழக்கறிஞர் ஆன வருடம் என்னிடம் கொடுத்து செலுத்திவருமாறு கூறினார், நான் போனஉடன் அவர் தனது உதவியாளர் ஒருவரிடம் ஜெயலெட்சுமி பைலில் வை நான் TRO பார்க்க போகும் பொழுது பார்த்துக்கொள்கிறேன் என்றார் , உடனே மேஜை மேல் ஜெயலட்சுமி என்று எழுதப்பட்ட பைலில் காத்திருந்தமாதரி எடுத்து வைத்தார் அந்த நோட்டீஸ்க்கு நகல் ஒன்றினை எடுத்து வைத்திருந்தேன் பிறகு அடுத்த வருடம் அதேபோல் நோட்டி  TRO  office யிலிருந்து வந்தது  இந்த முறை கேட்கப்பட்ட பாக்கிவரி கடந்த வருடத்தைவிட குறைவாக இருந்தது இது எனக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது, மேலும் கடந்த 10 வருடமாக வியாபாரம் செய்யாத எனது அம்மா பைல் உடனடியாக எப்படி மேஜை மேல் வந்து  சாதாரணமாக அலுவலக உதவியாளர் இந்த பைலை தேடி எடுக்க எவ்வாறு அவகாசம் எடுப்பார் என்று நமக்கு தெரியும் அந்த பட்டய  கணக்காளர் அவர்களின் நேர்மையை  அவரது  ஜாதியுடன்  மாண்பு  எனது தந்தை புகழாரம் சூட்டினார் அதனால் வரிவிதிப்பு உத்தரவுகளை அந்த கணக்காளார்  வசம் ஒப்படைத்திருந்தார்,  பிறகு அடுத்த வருடம் தீபாவளி சமயத்தில்  அதேபோல்  இன்னும்  ஒரு வரி கேட்பு  அறிவிப்பு வந்தது அதில்  Rs. 2560 வரிகேட்பு  வந்தது,  எனக்கு  இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது  அதனால் நான் நேரடியாக TRO அலுவலகம் சென்று விசாரித்தேன்,  அங்கு ஒரு இளம்  IRS அதிகாரி இருக்கையில்   இருந்தார்  அவரிடம் நான் அங்கு போன காரணத்தை கூறினேன்,  அவர் தன்வசம் உள்ள பதிவேட்டினை  காட்டினார் அதில் எனது தாயார் வருடத்திற்கு 250 முதல் 500 வரை குறைவாக  10 வருடத்திற்கு மேல்  கட்டியிருந்தது  தெரியவந்தது,  மொத்தவரிபாக்கி வட்டியுடன் ரூ4500 வந்திருந்தது  அதனை கட்டுவதற்காக வங்கிபட்டியல் கேட்டேன் அதற்கு அவர் சிரித்துக்கொண்டே  இந்த பதிவேட்டில் ரூபாய்  5000 மேல் வரிசைக்கு இருந்தால்தான் வரிபாக்கி  வசூலிக்கப்படும் எனக்கூறினார் அதற்கு  நான் எங்கள் வீட்டிற்கு வந்த நோட்டி சை காட்டியதற்கு அவர் நீங்கள் (வக்கீல்கள்)  மக்களையும் வருமான வரி இலாக்காவையும் எவ்வாறு ஏமாற்றுகிர்களோ அதுபோல தான் இந்த நோட்டஸ்ம் என கூறி அந்த நோட்டிஸ்  படிவங்களை   அங்கு  தொங்கவிட்டதை காட்டி னார்அங்கு அதனால் எனக்கு அவர் பெயரி்ல்  பலத்த  கோபம்  ஏற்பட்டது.  உடனே நான் எங்கள் வரிபாக்கியை  உடனே  கட்டிவிடுகிறோம்  என கூறி  வங்கிபட்டியல் வாங்கி வரி கட்டிவிட்டினேன்  னது பயணத்தை தொடர்கிறேன்